Yosanaiyil Periyavare – யோசனையில் பெரியவரே

Yosanaiyil Periyavare
யோசனையில் பெரியவரே
ஆராதனை ஆராதனை
செயல்களிலே வல்லவரே
ஆராதனை ஆரதனை

ஓசான்னா உன்னத தேவனே
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா

1. கண்மணி போல் காப்பவரே
கழுகு போல சுமப்பவரே
2. சிலுவையினால் மீட்டவரே
சிறகுகளால் மூடுபவரே
3. வழி நடத்தும் விண்மீனே
ஒளி வீசும் விடிவெள்ளியே
4. தேடி என்னை காண்பவரே
தினந்தோறும் தேற்றுபவரே
5. பரிசுத்தரே படைத்தவரே
பாவங்களை மன்னித்தவரே
6. உறுதியான அடித்தளமே
விலை உயர்ந்த மூலைக்கல்லே

Thaagam Ullavan Mel – தாகமுள்ளவன் தண்ணீரை

Thaagam Ullavan Mel
தாகமுள்ளவன் மேல் தண்ணீரை
ஊற்றுவேன் என்றீர்
வறண்ட நிலத்தில் ஆறுகளை
ஊற்றுவேன் என்றீர்

ஊற்றுமையா உம் வல்லமையை
தாகத்ததோடு காத்திருக்கிறேன் – நான்

1. மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமே
மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே

2. முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே
கனவுகள் காட்சிகள் காணவேண்டுமே

3. நீரோடை அருகிலுள்ள மரங்களைப்போல
நித்தமும் தவறாமல் கனிதர வேண்டும்

4. புதிய கூர்மையான கருவியாகணும்
பூமியெங்கும் சுவைதரும் உப்பாகணும்

5. கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும்
சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும்

6. வனாந்திரம் செழிப்பான தோட்டமாகனும்
வயல்வெளி அடர்ந்த காடாகனும்

7. நீதியும் நேர்மையும் தழைக்க வேண்டுமே
நல்வாழ்வும் நம்பிக்கையும் வளரவேண்டுமே

8. தூய நீரை எங்கள் மேல் தெளித்திட வேண்டும்
எல்லாவித அசுத்தங்கள் நீங்கிட வேண்டும்

Thaagamullavan mael thanneerai
Ootruvaen endreer
Varanda nilaththil aarugalai
Ootruvaen endreer

Ootrumaiyaa um vallamaiyai
Thaagathoadu kaaththirukkiraen – naan

1. Maamsamaana yaavarmaelum ootra vaendumae
Makkalellaam iraivaakku uraikka vaendumae

2. Mudhiyoar maelum ilaignar maelum ootra vaendumae
Kanavugal kaatchigal kaana vaendumae

3. Neeroadai arugilulla marangalaippoala
Niththamum thavaraamal kanithara vaendum

4. Pudhiya koormaiyaana karuviyaaganum
Boomiyengum suvaitharum uppaaganum

5. Kallaana idhayathai eduthida vaendum
Sadhaiyaana idhayathai poruththida vaendum

6. Vanaanthiram sezhippaana thoattamaaganum
Vayalveli adarntha kaadaaganum

7. Needhiyum naermaiyum thazhaikka vaendumae
Nalvaazhvum nambikkaiyum valara vaendumae

8. Thooya neerai engal mael theliththida vaendum
Ellaavitha asuththangal neengida vaendum

Yesu Raja Um Idaya – இயேசு ராஜா உம்

Yesu Raja Um Idaya
இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை
அறிந்து கொள்ளும் பாக்கியம் தாரும்
உம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்ற
கிருபையைத் தாரும்

ஒருவாழ்வு உமக்காக (2)
உணர்வெல்லாம் உமக்காக
உள்ளமெல்லாம் உமக்காக

1. உம் இதயம் மகிழ்ந்திட
வாழ்ந்திட வேண்டும்
உம் சித்தம் செய்து நான்
மடிந்திட வேண்டும்
2. அழிந்து போகும் ஆத்துமாக்கள்
நினைத்திட வேண்டும்
ஆத்தும பாரத்தினால் அலைந்திட வேண்டும்
3. உலத்திற்கு மரித்து நான்
வாழ்ந்திட வேண்டும்
உண்மையான ஊழியனாய்
உழைத்திட வேண்டும்
4. அகிலத்தையே உம் அண்டை
சேர்த்திட வேண்டும்
அனைத்து மகிமை
உமக்கே நான் செலுத்திட வேண்டும்

Yennappa Seiyanum Naan – என்னப்பா செய்யணும் நான்

Yennappa Seiyanum Naan
என்னப்பா செய்யணும் நான்
சொல்லுங்கப்பா செஞ்சுடறேன்
இயேசப்பா இயேசப்பா-என்னப்பா

1. உங்க ஆசை தான் எனது ஆசை
உங்க விருப்பம்தான் எனது விருப்பமே
2. உங்க ஏக்கங்கதான் எனது ஏக்கம்
உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா
3. இனிஒரு வாழ்வு இல்லை நீங்க இல்லாம
உங்க பாதம்தான் எனது தஞ்சமையா
4. எத்தனை இடர் வரட்டும்
அது என்னை பிரிக்காது
உமக்காய் ஓடிடுவேன்
உற்சாகமாய் உழைத்திடுவேன்

Kalmithikum Desam – கால் மிதிக்கும் தேசமெல்லாம்

Kalmithikum Desam
கால் மிதிக்கும் தேசமெல்லாம்-என்
கர்த்தருக்கு சொந்தமாகும்
கண்பார்க்கும் பூமியெல்லாம்
கல்வாரி கொடிபறக்கும்

1. பறக்கட்டும் பறக்கட்டும்
சிலுவையின் ஜெயக்கொடி-அல்லேலூயா
உயரட்டும் உயரட்டும்
இயேசுவின் திருநாமம்-அல்லேலூயா
2. எழும்பட்டும் எழும்பட்டும்
கிதியோனின் சேனைகள்
முழங்கட்டும் முழங்கட்டும்
இயேசுதான் வழியென்று
3. செல்லட்டும் செல்லட்டும்
ஜெபசேனை துதிசேனை
வெல்லட்டும் வெல்லட்டும்
எதிரியின் எரிகோவை
4. திறக்கட்டும் திறக்கட்டும்
சவிசேஷ வாசல்கள்
வளரட்டும் வளரட்டும்
அபிஷேக திருச்சபைகள்

Paralogam Than En – பரலோகந்தான் என் பேச்சு

Paralogam Than En
பரலோகந்தான் என் பேச்சு
பரிசுத்தம் தான் என் மூச்சு
கொஞ்சக்காலம் இந்த பூமியிலே
இயேசுவுக்காய் சுவிஷேத்திற்காய்

தானான தனனா தானானனா
தானான தனனா தானானனா

1. என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே
தன்னோடு சேர்த்துக் கொள்வார்
கூடவே வைத்துக் கொள்வார் -என்னை
2. உருமாற்றம் அடைந்து
முகமுகமாக என் நேசரக் காண்பேன்
தொட்டு தொட்டுப் பார்ப்பேன் – இயேசுவை
3. சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்
பாடச் சொல்லி கேட்பேன் – அங்கு
சேர்ந்து பாடிடுவேன் -நான்
நடனமாடிடுவேன்
4. என் சொந்த தேசம் பரலோகமே
எப்போது நான் காண்பேன்
ஏங்குகிறேன் தினமும் – நான்
5. கண்ணிர்கள் யாவும் துடைக்கப்படும்
கவலைகள் மறைந்து விடும்
எல்லாமே புதிதாகும்
6. என்னோடு கூட கோடான கோடி
ஆன்மாக்கள் சேர்த்துக் கொள்வேன்
கூட்டிச் சென்றிடுவேன்

Ejamananey En Yesu Rajane – எஜமானனே என் இயேசு

Ejamananey En Yesu Rajane
எஜமானனே என் இயேசு ராஜனே
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே-என்
எஜமானனே எஜமானனே
என் இயேசு ராஜனே

1. உமக்காகத்தான் வாழ்கிறேன்
உம்மைத்தான் நேசிக்கிறேன்
பலியாகி எனை மீட்டீரே
பரலோகம் திறந்தீரையா

2. உயிர் வாழும் நாட்களெல்லாம்
ஓடி ஓடி உழைத்திடுவேன் -நான்
அழைத்தீரே உம் சேவைக்கு – என்னை
அதை நான் மறப்பேனோ

3. அப்பா உம் சந்நிதியில் தான்
அகமகிழந்து களிகூருவேன்
எப்போது உம்மைக் காண்பேன் -நான்
ஏங்குதய்யா என் இதயம்

4. என் தேச எல்லையெங்கும்
அப்பா நீ ஆள வேண்டும்
வறுமை எல்லாம் மாறணும் -தேசத்தின்
வன்முறை எல்லாம் ஒழியணும்

Ejamaananae en yaesu raajanae
Ennamellaam aekkamellaam
Um siththam seivadhuthaanae-en
Ejamaananae ejamaananae
En yaesu raajanae

1. Umakkaagathaan vaazhgiraen
Ummaithaan naesikkiraen
Baliyaagi enai meetteerae
Paraloagam thirandheeraiyaa

2. Uyir vaazhum naatkalellaam
Oadi oadi uzhaithiduvaen -naan
Azhaiththeerae um saevaikku – ennai
Adhai naan marapaenoa

3. Appaa um sannithiyil thaan
Agamagizhandhu kalikooruvaen
Eppoadhu ummai kaanbaen -naan
Aengudhaiyaa en idhayam

4. En dhaesa ellaiyengum
Appaa nee aala vaendum
Varumai ellaam maaranum -dhaesathin
Vanmurai ellaam ozhiyanum

Ethavathu Ethavathu Ethavathu – ஏதாவது ஏதாவது ஏதாவது

Ethavathu Ethavathu Ethavathu
ஏதாவது ஏதாவது ஏதாவது செய்யவேண்டும்
ஒவ்வொரு நாளும்
என் இயேசு ராஜாவுக்கு

1. துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும்
துரத்த வேண்டும்
சாத்தானை துரத்த வேண்டும்
2. செல்ல வேண்டும் தேசமெங்கிலும்
சொல்ல வேண்டும்
இயேசுவின் சுவிசேஷத்தை
3. தாங்க வேண்டும் ஊழியங்களை
நமது ஜெபத்தால் நமது பணத்தால்

Magimai Adaiyum Yesu – மகிமையடையும் இயேசு

Magimai Adaiyum Yesu
மகிமையடையும் இயேசு ராஜனே
மாறாத நல்ல மேய்ப்பனே
உந்தன் திருநாமம் வாழ்க
உலகெங்கும் உம் அரசு வருக – வருக

1. உலகமெல்லாம் மீட்படைய
உம் ஜீவன் தந்தீரையா

2. பாவமெல்லாம் கழுவிடவே
உம் இரத்தம் சிந்தினீரே

3. சாபமெல்லாம் போக்கிடவே
முள்முடி தாங்கினீரே

4. என் பாடுகள் ஏற்றுக் கொண்டார்
என் துக்கம் சுமந்தீரையா

5. கசையடிகள் உனக்காக
காயங்கள் உனக்காக

6. நோய்களெல்லாம் நீக்கிடவே
காயங்கள் பட்டீரையா

Vinnapathai Ketpavare – விண்ணப்பத்தை கேட்பவரே

Vinnapathai Ketpavare
விண்ணப்பத்தைக் கேட்பவரே – என்
கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா

1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்

2. மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே

3. சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்

4. என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா

5. குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்கள் நடக்கச் செய்தீர்

6. உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரம்

Vinnnappathai Kaetpavarae
En Kannnneerai Kaannpavarae
Sukam Tharupavarae Sthothiram Yesaiyaa

1. Ummaal Koodum Ellaam Koodum
Oru Vaarththai Sonnaal Pothum

2. Manathuruki Karam Neeti
Athisayam Seipavarae

3. Sitham Unndu Suthamaaku
Endru Solli Sukamaakkineer

4. En Noikalai Siluvaiyilae
Sumanthu Theertheeraiyyaa

5. Kurudarkalai Paarka Seitheer
Mudavarkalai Nadaka Seitheer

6. Um Kaayathaal Sukamaanaen
Oru Kodi Sthothiramae