Udavi Varum – உதவி வரும் கன்மலை

Udavi Varum
உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் (2)

1. கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார் (2)
இஸ்ரவேலை காக்கிறவர்
என்னாளும் தூங்க மாட்டார் (2) – உதவி

2. கர்த்தர் என்னை காக்கின்றார்
எனது நிழலாய் இருகின்றார் (2)
பகலினிலும் இரவினிலும்
பாது காக்கின்றார் (2) – உதவி

3. கர்த்தர் எல்லா தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காத்திடுவார் (2)
அவர் எனது ஆத்துமாவை
அனுதினம் காத்திடுவார் (2) – உதவி

4. போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார் (2)
இப்போது எப்போது
என்னாளும் காக்கின்றார் (2) – உதவி

Udhavi varum kanmalai noakki paarkindraen
Vaanamum vaiyamum padaiththavarai naan paarkindraen (2)

1. Kaalgal thallaada vidamaattaar
Kaakkum dhaevan uranga maattaar (2)
Isravaelai kaakkiravar
Ennaalum thoonga maattaar (2) – Udhavi

2. Kartthar ennai kaakkindraar
Enadhu nizhalaai irukkindraar (2)
Pagalinilum iravinilum
Paadhu kaakkindraar (2) – Udhavi

3. Kartthar ellaa theengirkum
Vilakki ennai kaaththiduvaar (2)
Avar enadhu aathumaavai
Anudhinam kaaththiduvaar (2) – Udhavi

4. Poagum poadhum kaakkindraar
Thirumbum boadhum kaakkindraar (2)
Ippoadhum eppoadhum
Ennaalum kaakkindraar (2) – Udhavi

Endrum Anandham – என்றும் ஆனந்தம்

Endrum Anandham
என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார்
துதிப்பேன் துதிப்பேன்
துதித்துக் கொண்டேயிருப்பேன்
அல்லேலூயா ஆனந்தமே (2)
1. உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
என்றும் தங்குவேன்
தேவனை நோக்கி அடைக்கலப் பாறை
என்றே சொல்லுவேன்
2. தமது சிறகால் என்னை மூடி
காத்து நடத்துவார்
அவரது வசனம் ஆவியின் பட்டயம்
எனது கேடகம்
3. வழிகளிளெல்லாம் என்னைக் காக்க
தூதர்கள் எனக்குண்டு
பாதம் கல்லில் மோதாமல் காத்து
கரங்களில் ஏந்துவார்
4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்தே செல்லுவேன்
சாத்தானின் சகல வலிமையை வெல்ல
அதிகாரம் எனக்குண்டு
5. ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு
என்றும் பதிலுண்டு
என்னோடு இருந்து விடுதலை கொடுத்து
என்னை உயர்த்துவார்
6. இரவின் பயங்கரம் பகலின் அம்பு
எதற்கும் பயமில்லை
உன்னத தேவன் எனது அடைக்கலம்
தங்கும் உறைவிடம்
7. தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு
என்றும் விடுதலை
அவரது நாமம் அறிந்த எனக்கு
அவரே அடைக்கலம்

Nalla Samarian Yesu – நல்ல சமாரியன் இயேசு

Nalla Samarian Yesu
நல்ல சமாரியன் இயேசு
என்னைத் தேடி வந்தார்

1. என்னைக் கண்டாரே
அணைத்துக் கொண்டாரே
2. அருகில் வந்தாரே
மனது உருகினாரே
3. இரசத்தை வார்த்தாரே
இரட்சிப்பைத் தந்தாரே
4. எண்ணெய் வார்த்தாரே
அபிஷேகம் செய்தாரே
5. காயம் கட்டினாரே
தோள்மேல் சுமந்தாரே
6. சபையில் சேர்த்தாரே
வசனத்தால் காப்பாரே
7. மீண்டும் வருவாரே
அழைத்துச் செல்வாரே

Ummai Pirinthu – உம்மைப் பிரிந்து

Ummai Pirinthu
உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா (2)

1. திராட்சை செடியின் கொடியாக
உம்மில் நிலைத்திருப்பேன்
மிகுந்த கனி கொடுப்பேன்
உம் சீடானாயிருப்பேன் – நான்
2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி
உம் கரம் வைக்கின்றீர்
உமக்கு மறைவாய் எங்கே போவேன்
உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் – நான்
3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே
பயந்து போக மாட்டேன்
துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போகமாட்டேன் – நான்
4. நடந்தாலும் படுத்திருந்தாலும்
என்னை சூழ்ந்து உள்ளீர்
என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
எல்லாம் உம் கிருபை – ஐயா

En Yesu Rajavukke – என் இயேசு ராஜாவுக்கே

En Yesu Rajavukke

என் இயேசு ராஜாவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்னோடு வாழ்பவர்க்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்

1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
நித்தமும் நினைக்கின்றேன் – 2
முழு உள்ளத்தோடு உம் நாமம்
பாடிப் புகழுவேன் – 2 (…என் இயேசு)

2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நேசர் நீர் அணைத்தீரே – 2
கைவிடப்பட்டு கதறினேன்
கர்த்தர் நீர் தேற்றினீர் – நான் – 2 (…என் இயேசு)

3. இனி நான் வாழ்வது உமக்காக
உமது மகிமைக்காக – 2
உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன்
ஓயாமல் பாடுவேன் – 2 (…என் இயேசு)

4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே
நோய்களை சுகமாக்கினீர் – 2
எனது ஜீவனை அழிவில் நின்று
காத்து இரட்சித்தீரே – 2 (…என் இயேசு)

En Yesu Raajaavukke
Ennaalum Sthoththiram
Ennodu Vaazhbavarkke
Ennaalum Sthoththiram

1. Karththaave Neer Seitha Nanmaigalai
Niththamum Ninaikkindren – 2
Muzhu Ullaththodu Um Naamam
Paadi Pugazhuven – 2 (…En Yesu)

2. Nerukkappatten Thallappatten
Nesar Neer Anaiththeere – 2
Kaividappattu Katharinen
Karththar Neer Thettrineer – Naan – 2 (…En Yesu)

3. Ini Naan Vaazhvathu Umakkaaga
Umathu Magimaikkaaga – 2
Um Anbai Eduththu Solluven
Oyaamal Paaduven – 2 (…En Yesu)

4. Paavangal Anaiththum Manniththeere
Noigalai Sugamaakkineer – 2
Enathu Jeevanai Azhivil Nindru
Kaaththu Ratchiththeere – 2 (…En Yesu)

 

Kalangathe Kalangathe Karthar – கலங்காதே கலங்காதே

Kalangathe Kalangathe Karthar
கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்

1. முள்முடி உனக்காக
இரத்தமெல்லாம் உனக்காக
பாவங்களை அறிக்கையிடு
பரிசுத்தமாகிவிடு – நீ

2. கல்வாரி மலைமேலே
காயப்பட்ட இயேசுவைப் பார்
கரம் விரித்து அழைக்கின்றார்
கண்ணீரோடு ஓடி வா – நீ

3. காலமெல்லாம் உடனிருந்து
கரம்பிடித்து நடத்திச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணி போல் காத்திடுவார் – உன்னை

4. உலகத்தின் வெளிச்சம் நீ
எழுந்து ஒளி வீசு
மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ)
மறைவாக இருக்காதே

5. உன் நோய்கள் சுமந்து கொண்டார்
உன் பிணிகள் ஏற்றுக்கொண்டார்
நீ சுமக்கத் தேவையில்லை
விசுவாசி அது போதும்

6. உலகம் உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னைத் துரத்திடலாம்
உன்னை அழைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்திடுவார்

Kalangaathae Kalangaathae
Karththar Unnaik Kaividamaattar

1. Mulmuti Unakkaaka
Iraththamellaam Unakkaaka
Paavangalai Arikkaiyidu
Parisuththamaaki Vidu – Nee

2. Kalvaari Malaimaelae
Kaayappatta Yesuvaip Paar
Karam Viriththu Alaikkintar
Kannnneerodu Oti Vaa – Nee

3. Kaalamellaam Udan Irunthu
Karampitiththu Nadaththich Selvaar
Kannnneerellaam Thutaippaar
Kannmanni Pol Kaaththiduvaar – Unnai

3. Ulakaththin Velichcham Nee
Elunthu Oli Veesu
Malaimael Ulla Pattanam – Thampi (Nee)
Maraivaaka Irukkaathae

4. Un Nnoykal Sumanthu Konndaar
Un Pinnikal Aettuk Konndaar
Nee Sumakkath Thaevaiyillai
Visuvaasi Athu Pothum

5. Ulakam Unnai Veruththidalaam
Uttaar Unnaith Thuraththidalaam
Unnai Alaiththavaro
Ullangaiyil Aenthiduvaar

Yesu Kooda Varuvar – இயேசு கூட வருவார்

Yesu Kooda Varuvar
இயேசு கூட வருவார்
எல்லாவித அற்புதம் செய்வார்
தந்தான தந்தனத்தானானா – 2

1. நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார்
நொந்துபோன உள்ளத்தை தேற்றிடுவார்

2. வேதனை துன்பம் நீக்கிடுவார்
சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார்

3. கடன்தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்
கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார்

4. எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன்
எதிரியான சாத்தானை முறியடிப்பேன்

Kartharai Nambidungal – கர்த்தரை நம்பிடுங்கள்

Kartharai Nambidungal

கர்த்தரை நம்பிடுங்கள்
அவர் கைவிடவே மாட்டார் (2) – 2

1. உயிர் வாழ எதை உண்போம்
உடல் மூட எதை உடுப்போம்
என்றே கவலைப்படல் வேண்டாம் – 2
உணவை விட உயிரும்
உடையை விட உடலும்
உயர்ந்தவை அல்லவா – 2
வானத்துப் பறவையை பாருங்கள்
அவை விதைப்பதும் இல்லை.. அறுப்பதும் இல்லை
சேர்த்து வைப்பதும் இல்லை – 2
கர்த்தர் காக்கின்றார் (2)

2. கவலை படுவதினால்
எவன் தன் வளர்த்தியிலே
ஒரு முழம் கூட்ட முடியும் – 2
எதை உடுப்போம் என்று
கவலையே வேண்டாம்
சொல்வதைக் கேளுங்கள் – 2
வயல்வெளி மலர்களைப் பாருங்கள்
அவை உழைப்பதும் இல்லை.. நூற்பதும் இல்லை
கவலை படுவதும் இல்லை – 2
கர்த்தர் உடுத்துகின்றார் (2)

Karththarai Nambidungal
Avar Kaividave Maattaar (2) – 2

1. Uyir Vaazha Edhai Unbom
Udal Mooda Edhai Uduppom
Endre Kavalaippadal Vendaam – 2
Unavai Vida Uyirum
Udaiyai Vida Udalum
Uyarnthavai Allavaa – 2
Vaanaththu Paravaiyai Paarungal
Avai Vidhaippathum Illai.. Aruppathum Illai
Serththu Vaippathum Illai – 2
Karththar Kaakkindraar (2)

2. Kavalai Paduvathinaal
Yevan Than Valarththiyile
Oru Muzham Kootta Mudiyum – 2
Edhai Uduppom Endru
Kavalaiye Vendaam
Solvathaik Kelungal – 2
Vayalveli Malargalaip Paarungal
Avai Uzhaippathum Illai.. Noorpathum Illai
Kavalai Paduvathum Illai – 2
Karththar Uduththukindraar (2)

Deivame Yesuve – தெய்வமே இயேசுவே

Deivame Yesuve
தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்
தினம்தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2
1. உலகப் பெருமை இன்பமெல்லாம்
உமக்காய் இழந்தேனையா
உம்மைப் பிரிக்கும் பாவங்களை
இனிமேல் வெறுத்தேனையா
உம் சித்தம் நிறைவேற்றுவேன்
உமக்காய் வாழ்ந்திடுவேன்
2. எதை நான் பேசவேண்டுமென்று
கற்றுத் தாருமையா
எவ்வழி நடக்க வேண்டுமென்று
பாதை காட்டுமையா
ஒளியான தீபமே
வழிகாட்டும் தெய்வமே
3. உலகம் வெறுத்து பேசட்டுமே
உம்மில் மகிழ்ந்திருப்பேன்
காரணமின்றி பகைக்கட்டுமே
கர்த்தரைத் துதித்திடுவேன்
சிலுவை சுமந்தவரை
சிந்தையில் நிறுத்துகிறேன்

Aarathipen Naan Aarathipen – ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

Aarathipen Naan Aarathipen
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்

1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்

2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்
பணிந்து குனிந்து ஆராதிப்பேன்

3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்

4. தூதர்களோடு ஆராதிப்பேன்
ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன்

5. காண்பவரை நான் ஆராதிப்பேன்
காப்பவரை நான் ஆராதிப்பேன்

6. வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்
குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்

Aarathipen Nan Aarathipen
Andavar Yesuvai Aarathipen

1. Vallavare Ummai Aarathipen
Nallavare Ummai Aarathipen

2. Parisutha Ullathodu Aarathipen
Paninthu Kuninthu Aarathipen

3. Aviyile Ummai Aarathipen
Unmaiyile Ummai Aarathipen

4. Tutharkalodu Aarathipen
Sthothira Paliyodu Aarathipen

5. Kanbavarai Naan Aarathipen
Kappavarai Naan Aarathipen

6. Vennadai Aninthu Aarathipen
Kurutholai Enthi Aarathipen