Naan Bayapadum – நான் பயப்படும்

Naan Bayapadum
நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
என் கோட்டையும் அரணுமாயிருக்க
நான் அடைக்கலம் புகுந்திடுவேன்
1. உங்களில் இருப்பவர் பெரியவரே
பரிசுத்தமானவரே
அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்
நித்திய காலமெல்லாம் நம்மையே
2. நம்மைக் காப்பவர் அயர்வதில்லை
உறங்குவதும் இல்லை
அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்
என் கூப்பிடுதல் அவர் செவியினிலே

Kankindra Devan – காண்கின்ற தேவன்

Kankindra Devan
காண்கின்ற தேவன் நம் தேவன்
காலமும் அவரைத் துதித்திடுவோம்
அல்லேலூயா – அல்லேலூயா (2)
1. தம்மைத் தேடும் உணர்வுள்ளவன்
தரணியில் எவரேனும் உண்டோ
கர்த்தர் இயேசு காண்கின்றார்
கருத்தாய் அவரை தேடிடுவோம்
2. ஆவியிலே நொறுக்கப்பட்டு
ஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிற
அன்பு இதயம் காண்கின்றார்
அணுகிடுவோம் நாம் கண்ணீரோடு
3. உத்தம இதயம் கொண்டிருப்போம்
உன்னத வல்லமை பெற்றிடுவோம்
கர்த்தரின் கண்கள் பூமியெங்கும்
கருத்தாய் நோக்கிப் பார்க்கின்றன
4. ஆண்டவர் வார்த்தைக்குப் பயந்து
அவரது கிருபைக்கு காத்திருந்தால்
பஞ்ச காலத்தில் உணவளிக்க
பரிவாய் நம்மைப் பார்க்கின்றார்.

Visuvaasaththinaal Neethiman- விசுவாசத்தினால்

Visuvaasaththinaal neethiman
விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசியே பதறாதே
கலங்காதே திகையாதே விசுவாசியே
கல்வாரி நாயகன் கைவிடாரே

1. தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்
பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்
நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை
சொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார்

2. பிறர்வசை கூறி துன்புறுத்தி
இல்லாதது சொல்லும்போது
நீ மகிழ்ந்து களிகூரு
விண் கைமாறு மிகுதியாகும்

3. கொடும் வறுமையில் உழன்றாலும்
கடும் பசியினில் வாடினாலும்
அன்று எலியாவை போஷித்தவர்
இன்று உன் பசி ஆற்றிடாரோ

பாலிலும் வெண்மை – Pallilum Venmai

Pallilum Venmai
பாலிலும் வெண்மை
வெண்மையாக்குமேன்
பாலிலும் வெண்மையாக்குமேன்
என் உள்ளம் மீட்பர் இரத்தத்தால்

Sutham Panna Padaatha Desame – சுத்தம் பண்ணப்படாத தேசமே

Sutham Panna Padaatha Desame
சுத்தம் பண்ணப்படாத தேசமே
சுத்திகரிக்க உன்னைத் தருவாயோ?
ஸ்திரப்படாத தேசமே
நீதியின் வஸ்திரம் தரிப்பாயோ?

1. வேதத்தை சுமக்கும் சீடர்களே
வேண்டாத சுமைகளை விட்டுவிடுங்கள்
பாவத்தை சுமக்கும் பாரதத்தின்
தூய்மைக்கு மாதிரி காட்டிடுங்கள்

2. தேசத்தை ஆளும் பிரபுக்களே
தாழ்மையின் குரலுக்கு செவிகொடுங்கள்
தேவைக்கு அதிகம் இருப்பதெல்லாம்
ஏழைக்கு தானம் செய்திடுங்கள்

3. பெலனான வயதுள்ள வாலிபரே
தொலைநோக்க கண்களை ஏறெடுங்கள்
எதிர்காலம் கனவாக மறைவதற்குள்
சுடராக இருளுக்குள் ஒளி கொடுங்கள்

Suththam pannapadaadha dhaesamae
Suthigarikka unnai tharuvaayoa?
Sthirapadaadha dhaesamae
Needhiyin vasthiram tharippaayoa?

1. Vaedhathai sumakkum seedargalae
Vaendaadha sumaigalai Vittuvidungal
Paavathai sumakkum baaradhathin
Thooimaikku maadhiri kaatidungal

2. Dhaesathai aalum pirabukkalae
Thaazhmaiyin kuraluku sevikodungal
Thaevaiku adhigam iruppadhellaam
Yaezhaikku dhaanam seidhidungal

3. Belanaana vayadhulla vaalibarae
Tholainaokku kangalai aeredungal
Edhirkaalam kanavaaga maraivadharkul
Sudaraaga irulukkul oli kodungal

Manam Thirumbum Paavikkellaam Pugalidamae – மனந்திரும்பும் பாவிக்கெல்லாம்

Manam Thirumbum Paavikkellaam Pugalidamae
மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் புகலிடமே
மனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே

வந்தனமப்பா வந்தனமே

1. திருச்சபை நடுவில் உமது பெயரைச் சொல்லியே பாடிடுவேன்
திருக்கரம் செய்திட்ட அற்புதம் நினைக்கிறேன்
உம்முடைய செயல்களெல்லாம் நினைக்கும்போது வியக்கிறேன்

2. இரதங்களும் குதிரைகளும் எங்களை இரட்சிக்க முடியவில்ல
உம்மை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்ல
உம்மை நம்பி வந்துவிட்டோமே வேறொரு நாமத்தை அறியவில்ல

3. கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும் பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே
காத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபையே
என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு அவர் சந்நிதியே

Manam Thirumbum Paavikkellaam Pugalidamae
Manadhurugum dhevan endhan maraividamae

Vandhanamappaa vandhanamae

1. Thiruchabai naduvil umadhu peyarai cholliyae paadiduvaen
Thirukkaram seidhitta arpudham ninaikirayn
Ummudaiya seyalgal ellaam ninaikkum bodhu viyakkirayn

2. Radhangalum gudhiraigalum engalai ratchikka mudiyavilla
Ummai vittaal engalukku vera vazhi illa
Ummai nambi vandhuvittoemay veroru naamathai ariyavilla

3. Kartharukkul magizhndhirukkum pillaikalukkendrum nimmathiyae
Kaathirundhaal kidaikkum avarin kirubaiyae
Ennai vittu edubadaadha nalla pangu avar sannidhiyae

Ennai Verumai Aakinen – என்னை வெறுமையாக்கினேன்

Ennai Verumai Aakinen
என்னை வெறுமையாக்கினேன்
உம்மை மகிமைப்படுத்தினேன்

1. நான் யார் நான் யார் ஒரு மனிதன் தானே
நான் யார் நான் யார் வெறும் களிமண்தானே

2. நான் யார் நான் யார் ஒரு மனுஷி தானே
நான் யார் நான் யார் வெறும் தூசி தானே

3. இல்லை இல்லை நான் ஒன்றும் இல்லை
உந்தன் கையில் நான் சிறுபிள்ளை

Ennai Verumai Aakinen
Ummai magimai paduthinanen

1. Naan yaar naan yaar oru manidhan thaanay
Naan yaar naan yaar verum kaliman thaanay

2. Naan yaar naan yaar oru manushi thaanay
Naan yaar naan yaar verum dhoosi thaanay

3. Illai illai naan ondrum illai
Undhan kaiyil naan siru pillai

போர்க் களத்தின் முன்னணியில்

1. போர்க் களத்தின் முன்னணியில்
சாத்தான் எதிரே நிற்கும்போது
Forward March
Left Right (3)
இயேசுவின் போர் வீரராக முன்னே செல்வோம் – (2)

2. சந்தேகம் என்னும் பட்டயத்தை
சாத்தான் கையில் எடுக்கும்போது
Forward March
Left Right (3)
ஆவியின் பட்டயத்தாலே சாத்தானை வெல்வோம் – (2)

Aaraainthu Mudiyaatha – ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும்

Aaraainthu Mudiyaatha

ஆராய்ந்து முடியாத
பெரிய காரியங்களையும்
எண்ணி முடியாத அதிசயங்களையும்
ஆண்டவர் இயேசு (2)
அருமையாக செய்கிறார்
ஆண்டவர் இயேசு (2)
அவரில் பிள்ளைகளுக்குச் செய்கிறார்

Aaraainthu Mudiyaatha
Periya Kaariyangalayum
Enni Mudiyatha Adhisayangalayum
Aandavar Yesu (2)
Arumayaaga Seikiraar
Aandavar Yesu (2)
Avaril Pillaigaluku Seigiraar

Raajaathi Raajaa – ராஜாதி இராஜா

Raajaathi Raajaa

ராஜாதி இராஜா
கர்த்தாதி கர்த்தர் மகிமை அல்லேலுயா
இயேசு சமாதான பிரபு மகிமை அல்லேலுயா

Raajaathi Raajaa
Karthaathi Karthar Magimai Alleluyaa
Yesu Samaathaana Prabu Magimai Alleluyaa