Aha Ha Anandham
ஆஹா ஹா ஆனந்தம்
ஆசீர்வாத மழைப்பெய்யும்
ஒரு வார்த்தை சொன்னாலே
எல்லாமே உருவாகும்
உருவாக்கும் தேவனே துதி உமக்கே
வல்லமை மேல் வல்லமை தந்து
அதிசயம் காணச்செய்வீர்
உம்மைத் தவிர யாருமில்லை எனக்காகவே
இதயங்கள் ஏங்குதே உமக்காக
விடுதலை எனக்கு எனக்கு வேண்டும்
விடுதலை எனக்கு எனக்கு வேண்டும்
விடுதலை எனக்கு எனக்கு வேண்டும் என்றுமே
1. எலியாவின் தேவன் நீரே
யோர்தானைப் பிரித்தவரே
தூயாதி தூயவரே துணையாளரே
சர்வ வல்ல தேவன் நீரே யெகோவா யெகோவா
காண்கின்ற தேவன் நீரே யெகோவா யெகோவா
இதயங்கள் ஏங்குதே உமக்காக – விடுதலை
2. நிகரில்லா தேவன் நீரே
நினைவெல்லாம் நீர் தானே
இரவோடு பகலாய் நின்று
கண்மனிப் போல் காப்பவரே
உணர்வெல்லாம் துடிக்கின்றதே இயேசுவே இயேசுவே
என்றென்றும் இணைந்திருப்பேன் இயேசுவே இயேசுவே
இதயங்கள் ஏங்குதே உமக்காக – விடுதலை