Ella Aaseervatharthinaal Ennai
1. எல்லா ஆசீர்வாதத்தினால் என்னை ஆசீர்வதித்தவரே
உலகம் உண்டாகுமுன்னே
என்னை தெரிந்துகொண்டவரே – 2
திறந்தருளும் திறந்தருளும் என் கண்களை திறந்தருளும்
தந்தருளும் தந்தருளும் பிரகாச கண்களை தந்தருளும் – 2
2. இயேசுவின் இரத்தத்தினால் என்னை பாவமற மீட்டவரே
பரிசுத்த ஆவியால் என்னை முத்திரையிட்டவரே – 2 – திறந்தருளும்
3. உன்னதத்தில் கிறிஸ்துவோடு என்னை உட்கார வைத்தவரே
இயேசுவினால் எல்லாவற்றையும் எனக்கு தந்தவரே – 2
– திறந்தருளும்