Vallamai Undu Undu Arputha Vallamai
வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
இயேசுவின் இரத்தத்தில்!
வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால்!
Isravelin Thuthigalil
இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்
எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே
ஓஹோ.. வாக்குகள் பல தந்து அழைத்துவந்தீர்
ஒரு தந்தை போல எம்மை தூக்கி சுமந்தீர்
இனி நீர் மாத்ரமே எங்கள் சொந்தமானீர்
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம்
1. எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்
காலத்தைப் படைத்தவர் தேடிவந்தீர்
சிறையிருப்பை மாற்றி தந்தீர்
சிறுமையின் ஜனம் எம்மை உயர்த்திவைத்தீர் – இனி நீர் மாத்ரமே
2. செங்கடலைக் கண்டு சோர்ந்துபோனோம்
யோர்தானின் நிலை கண்டு அஞ்சி நின்றோம்
பயப்படாதே முன் செல்லுகிறேன்
என்றுரைத்து எம்மை நடத்திவந்தீர் – இனி நீர் மாத்ரமே
3. எதிரியின் படை எம்மை சூழும்போது
ஓங்கிய புயங் கொண்டு யுத்தம் செய்தீர்
பாடச் செய்தீர் துதிக்கச் செய்தீர்
எரிகோவின் மதில்களை இடிக்கச் செய்தீர் – இனி நீர் மாத்ரமே
Isravelin Thuthigalil Vasam Seyyum
engal devan neer parisuthare – 2
o..vakkugal pala thandu alaittu vandeer
oru thantai pola emmai thukki sumandeer
ini neer mathrame.. neer mathrame…
neer mathrame… en sondamaneer..
ஆத்துமமே என் முழு உள்ளமே
உன் அற்புத தேவனையே ஸ்தோத்தரி
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெரு வெள்ளமே – அல்லேலூயா
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெரு வெள்ளமே
1. படகிலே படுத்து உறங்கினாலும்
கடும் புயல் அடித்து கவிழ்ந்தாலும்
கடலையும் காற்றையும் அமர்த்தி எம்மைக்
காத்தாரே அல்லேலூயா (…ஆத்துமமே)
2. யோர்தானை கடந்தோம் அவர் பெலத்தால்
எரிகோவை தகர்த்தோம் அவர் துதியால்
இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தே
என்றென்றுமாய் வாழ்வோம் (…ஆத்துமமே)
3. பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம்
அதி சீக்கிரமாய் முடிகிறதே
விழிப்புடன் கூடி தரித்திருப்போம்
விரைந்தேசு வந்திடுவார் (…ஆத்துமமே)
4. கருணையாய் இதுவரை கைவிடாமலே
கண்மணி போல் என்னைக் காத்தாரே
கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்
கருத்துடன் பாடிடுவோம் (…ஆத்துமமே)
Aaththumame En Muzhu Ullame
Un Arputha Devanaiye Sthoththari
Pongiduthe En Ullaththile
Peranbin Peru Vellame – Alleluyaa
Pongiduthe En Ullaththile
Peranbin Peru Vellame