எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர் (4)
இன்றே செய்பவர் நன்றே செய்பவர் (2) என்றும் செய்பவர்
1. இருளில் இருந்து ஒளியை படைத்தவர்
வெறுமையில் இருந்து உலகை படைத்தவர் – 2
காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர் (2)
செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர் (2) (…எனக்காக)
2. தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர்
தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர் – 2
என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர் (2)
புரண்டுவரும் பெரு வெள்ளத்திற்கும் புகலிடமானவர் (2) (…எனக்காக)
மறப்பேனோ உமது அன்பை – நான் (2)
மண்டியிடுவேன் உம் பாதத்திலே – 2
1. எளியோனை கண்நோக்கி பார்த்தீரையா
பெயர் சொல்லி என்னை அழைத்தீரையா – 2
உமை விட்டு எங்கோ நான் சென்றபோதும் – 2
எனை தேடி என் பின்னே வந்தீரையா – 2 (…மறப்பேனோ)
2. நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால்
நிர்மூலமாகாமல் காத்தீரையா – 2
கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே – 2
கனிவாக என்னை நீர் தேற்றினீரையா – 2 (…மறப்பேனோ)
3. இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே
வழி ஒன்றும் அறியாமல் தவிக்கையிலே – 2
மறந்தீரோ என்று நான் அழுதேனையா – 2
மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா – 2 (…மறப்பேனோ)
Ebinesare Aaraathanai
En Thunaiyaalare Aaraathanai – 2