All Songs by david

Pothumanavare Puthumaiyanavare – போதுமானவரே புதுமையானவரே

Pothumanavare Puthumaiyanavare

போதுமானவரே புதுமையானவரே
பாதுகாப்பவரே என்பாவம் தீர்த்தவரே
ஆராதனை (2)
ஆயுளெல்லாம் ஆராதனை

எனக்காக தண்டிக்கப்பட்டீரே
அதனால் நான் மன்னிக்கப்பட்டேன்
எனக்காக காயப்பட்டீரே
அதனால் நான் சுகம்
பெற்றுக் கொண்டேன்

பாவங்கள் சுமந்ததனால் நான்
நீதிமானாய் மாற்றப்பட்டேன்
மரணத்தை ஏற்றுக் கொண்டதால் நித்திய
ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா

எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்
அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்
எனக்காக அவமானமடைந்து உம்
மகிமையிலே பங்குபெறச் செய்தீர்

சிலுவையிலே ஏழ்மையானதால் என்னை
செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே நீர்
சாபங்களை சுமந்து கொண்டதால் நான்
ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன்

Pothumaanavarae Puthumaiyaanavarae
Paathukaappavarae En Paavam Theerththavarae
Aaraathanai (2) Aayulellaam Aaraathanai

1. Enakkaaga Thandikappattirae
Athanaal Naan Mannikappattaen
Enakaaga Kaayapattirae
Athanaal Naan Sukam Petru Kondaen

2. Paavangal Sumanthathanaal – Naan
Neethimaanaai Maatrapataen
Maranathai Aettu Konndathaal – Nithiya
Jeevanai Petru Kondaen Aiyaa

3. Enakaaga Purakannikappateer
Athanaal Naan Aettu Kollappattaen
Enakaaga Avamaanamataindhu – Um
Makimaiyilae Panguperach Seitheei

4. Siluvaiyilae Aelmaiyaanathaal – Ennai
Selvanthanaai Maatrivittirae – Neer
Saapangalai Sumanthu Kondathaal – Naan
Aasirvaatham Petru Konntaen Aiyaa

Aa Varum Naam Ellarum Koodi – வாரும் நாம் எல்லோரும் கூடி

Aa Varum Naam Ellarum Koodi
வாரும் நாம் எல்லோரும் கூடி,
மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும்
மாசிலா நம் யேசு நாதரை
வாழ்த்திப் பாடுவோம். ஆ!

சரணங்கள்

1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத்
தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் — வாரும்

2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே
மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் — வாரும்

3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும்
நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார் — வாரும்

4. மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே – இந்த
மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார் — வாரும்

5. பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே – அவர்
பட்சம் வைத் துறும் தொழும்பரை ரட்சை செய்கிறார் — வாரும்

Vaarum Naam Ellorum Kooti,
Makil Konndaaduvom; – Sattum
Maasilaa Nam Yaesu Naatharai
Vaalthi Paaduvom. Aa!

Saranangal

1. Thaarakam Atta Aelaikal Thalaikka Naayanaar – Inthath

Thaarani Yilae Manudava Thaaram Aayinaar — Vaarum

2. Maa Pathaviyai Ilanthu Variyar Aana Naam – Angae

Maatchi Ura Vaenntiyae Avar Thaalchchi Aayinaar — Vaarum

3. Njaalamathil Avarkinnai Nannpar Yaarular – Paarum

Nam Uyirai Meetkavae Avar Tham Uyir Vittar — Vaarum

4. Maa Kotiya Saavathin Valimai Neekkiyae – Intha

Mandalathi Nintuyir Thavar Vinndalan Sentar — Vaarum

5. Paavika Kaai Paranidam Parinthu Vaentiyae – Avar

Patcham Vaith Thurum Tholumparai Ratchanai Seykiraar — Vaarum

Thuthi Thangiya Paramandala – துதி தங்கிய பரமண்டல

Thuthi Thangiya Paramandala
துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்!

சரணங்கள்

1. அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்,
கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன் — துதி

2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்,
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார் — துதி

3. திருவான் உல கரசாய் வளர் தேவ சொரூபனார்,
ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார் — துதி

4. ஆபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன்,
எபிரேயர்கள் குலம் தாவீதென் அரசற் கோர்குமாரன் — துதி

5. சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன்,
கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் — துதி

6. விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன்,
பண்ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன் — துதி

Thuthi Thangiya Paramandala Suvisedaka Naamam,

Supa Mangala Miku Sampirama Suka Sopana Shaemam!

Saranangal

1. Athi Sunthara Nirai Konduyar Arul Mokisha Theeban,

Kathi Umparkal Tholum Ingitha Karunnaip Pirathaapan — Thuthi

2. Manthai Aayar Panninthu Paatham Makilnthu Vaalthiya Athanaar,

Ninthaiyaai Oru Kanthai Moodavum Vantha Maapari Suthanaar — Thuthi

3. Thiruvaan Ula Karasaai Valar Thaeva Soroopanaar,

Oru Maathutai Vinai Maarida Narar Roopamathaanaar — Thuthi

4. Aapiraam Muni Yidamaeviya Pathilaal Upakaaran,

Epiraeyarkal Kulam Thaaveethen Arasar Korkumaaran — Thuthi

5. Saathaa Rana Vaethaa Kama Saasthra Suviseshan,

Kothae Puri Aathaa Mutai Kothra Thiru Vaeshan — Thuthi

6. Vinnnnaadarum Mannaadarum Maevun Thiru Paathan,

Pannothuvar Kannaam Valar Para Manndala Naathan — Thuthi

Vazhuvamal Kathita Dhevanae – வழுவாமல் காத்திட்ட தேவனே

Vazhuvamal Kathita Dhevanae
வழுவாமல் காத்திட்ட தேவனே
என் வலக்கரம் பிடித்தவரே
வல்லடிக்கெல்லாம் விலக்கி என்னை
வாழ்ந்திட செய்தவரே

ஆயிரம் நாவிருந்தாலும்
நன்றி சொல்லித் தீராதே
வாழ் நாளெல்லாம் உம்மைப் பாட
வார்த்தைகளும் போதாதே
நான் உள்ளவும் துதிப்பேன்
உன்னதர் இயேசுவே

என் மேல் உம் கண்ணை வைத்து
உம் வார்த்தைகள் தினமும் தந்து
நடத்தின அன்பை நினைக்கையில்
என் உள்ளம் நிறையதே
உம் அன்பால் நிறையுதே

எத்தனை சோதனைகள்
வேதனையின் பாதைகள்
இறங்கி வந்து என்னை மறைத்து
நான் உண்டு என்றீரே
உன் தகப்பன் நான் என்றிரே

Vazhuvamal Kathita Dhevanae
En Valakaram Pidithavarae
Valladikkellam Vilakki Ennai
Vaazhnthida Seibavarae

Aayiram Navirunthaalum
Nantri Solli Theeraathae
Vaazhnaalellam Ummai Paada
Vaarthaikalum Pothaathae
Nan Ullalavum Thuthippaen
Unnathar Yesuvae

Enmael Um Kannai Vaithu
Um Vaarthaikal Thinamum Thanthu
Nadathina Anbai Ninaikaiyil
En Ullam Niraiyuthae
Um Anbal Niraiyuthae

Ethanai Sothanaigal
Vethanayin Paathaigal
Irangi Vanthu Ennai Maraithu
Naan Undu Enteerae
Un Thagappan Naan Enteerae

Varanda Nilangal Neerrutragum – வறண்ட நிலங்கள் நீரூற்றாகும்

Varanda Nilangal Neerrutragum
வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் கர்த்தர் என் பட்சம் இருந்தால் வனாந்திரம் புல்
வெளியாகிடும் கர்த்தர் என்னோடு நடந்தால்
தீமை தொடருவதில்லை, வாதை அணுகுவதில்லை – 2

மேய்ப்பனே நல் மேய்ப்பனே
நீர் என்னோடிருந்தால் தாழ்ச்சி இல்லையே – 2

நெரிந்த நாணலை முறித்து போடாதவர்
மங்கி எரியும் திரியை அனைந்திடாமல் காப்பவர் – 2
இதயம் நெருக்கப்படுகையில் இதமாய் என்னை தாங்கினீர்
ஆத்துமா தொய்ந்து போகையில்
காயம் கட்டி குணமாக்கினீர் — மேய்ப்பனே

கால்கள் இடறுகையில் நீர் என்னை தாங்கினீர்
சேதமனுகாமல் தூதரை அனுப்பி என்னை ஏந்துனீர் – 2
பொல்லாங்கன் எய்திட்ட அம்புக்கும் கர்த்தனே என்னை தப்புவித்தீர்
மறைவாய் வைத்த கண்ணிக்கும்
விலக்கி என்னை மீட்டெடுத்தீர் — மேய்ப்பனே

Varanda Nilangal Neeruttraahum Karthar En Patcham Irunthaal
Vanaanthiram Pul Veliyaahidum Karthar Ennodu Nadanthaal
Theemai Thodaruvathillai Vaathai Anuhuvathillai – 2

Meipanae Nal Meipanae
Neer Ennodirunthal Thaalchi Illaiyae – 2

Nerintha Naanalai Muritthu Podaathavar
Mangi Eriyum Thiriyai Anaindhidaamal Kaappavar – 2
Ithayam Nerukkappadukayil Ithamaai Emmai Thaangineer
Aatthumaa Thointhu Pokaiyil
Kaayam Katti Kunamaakkineer

Kaalhal Idarukayil Neer Ennai Thaangineer
Sethamanukaamal Thootharai Anuppi Ennai Eanthineer – 2
Pollaangan Eithitta Ambukkum Karthanae Ennai Thappuvittheer
Maraivaai Vaittha Kannikkum
Vilakki Ennai Meeteduttheer

Avar Thoolgalin – அவர் தோள்களின் மேலே

Avar Thoolgalin
அவர் தோள்களின் மேலே
நான் சாய்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம்
அவர் பார்த்துக்கொள்வதால்

நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே
அவர் வார்த்தையின் மேலே
நான் சார்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம்
அவர் பார்த்துக்கொள்வதால்

நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே
யெகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யெகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே-2

1. மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
என் அப்பா என்னோடு இருப்பதாலே
பயப்படமாட்டேன்-2
எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்
பதினாயிரங்கள் எழுந்தாலும்
அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே

2. நெருக்கத்திலே கர்த்தரை
நோக்கி கூப்பிட்டேன்
என்னை விசாலத்தில் கொண்டு வந்து
மீட்டுக்கொண்டாரே-2
என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே
ஒருபோதும் நான்
அசைக்கப்படுவதில்லையே-2-யெகோவாயீரே

Maenmai Paaratuven – மேன்மை பாராட்டுவேன்

Maenmai Paaratuven
மேன்மை பாராட்டுவேன் நான்
மேன்மை பாராட்டவேனே – 2
இயேசுவின் அன்பினையே
மேன்மை பாராட்டுவேன் – என்
இயேசுவின் அன்பினையே
மேன்மை பாராட்டுவேன்

சிலுவை எந்தன் மேன்மை
சிலுவை எந்தன் அடைக்கலம் – 2
ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்
சிலுவைநாதரே ஸ்தோத்திரம் – 2

1. சிலுவையில் அரையுண்டேன் நான்
சிலுவையில் அரையுண்டேன் – இனி
நானல்ல இயேசுவே என்னில்
என்றும் அவரைக் காட்டிடுவேன்
– சிலுவை எந்தன்

2. சிலுவையை சுமந்திடுவேன் நான்
சிலுவையை சுமந்திடுவேன் – இனி
இயேசுவின் மகிமைக்காய் நானே
என்றும் பாடுகள் சகித்திடுவேன் – சிலுவை எந்தன்

Athisaya Yesuvai Potriduvom – அதிசய இயேசுவை போற்றிடுவோம்

Athisaya Yesuvai Potriduvom

அதிசய இயேசுவை போற்றிடுவோம்
அனுதினம் அவரன்பை கூறிடுவோம்

ஆனந்தமே பேரானந்தமே
அதிசயமே அவர் செயல்களே

1. கானாவில் கனிரசம் தந்தவராம்
காற்றையும் கடலையும் அதட்டினோராம்
– ஆனந்தமே

2. நோய்களை தீர்ந்திட்ட நல்லவராம்
பேய்களை விரட்டிட்ட வல்லவராம்
– ஆனந்தமே

Kalvaari Siluvayilae – கல்வாரி சிலுவையிலே

Kalvaari Siluvayilae
கல்வாரி சிலுவையிலே
கள்வர்கள் நடுவினிலே -2
கர்த்தன் இயேசு எனக்காகப்பட்ட
பாடு அவமானங்கள் -கல்வாரி

நினைத்து நினைத்து துதிக்கின்றேனே
உம்மை நோக்கி பார்க்கின்றேனே -2
நன்றி நன்றி ஐயா….
நன்றி இயேசய்யா -2

1. பாவ சாப ரோகங்கள் யாவும்
சிலுவையிலே சுமந்து நீர் தீர்த்தீர் -2
உந்தன் தழும்புகளால் பூரண சுகமானேனே
சிந்தின இரத்தத்தினால் மீட்பினை பெற்றேனே -2 -நினைத்து

2. எத்தனையோ துரோகம் நான் செய்தேன்
இத்தனை என் மேல் அன்பு வைத்தீரே-2
எத்தனை என்னையுமே உத்தமனாக்கினீரே
சிந்தின இரத்தத்தினால் மீட்பினை பெற்றேனே-2
-நினைத்து

Kalvaari Siluvayilae
Kalvarkal Naduvinilae-2
Karththan Yesu Enakkaaka patta
Paadu Avamaananhal-Kalvaari

Ninaithu Ninaithu Thuthikkindrenae
Ummai Nokki Parkkindraene-2
Nandri Nandri Aiya
Nandri Yesaiyah -2

1. Paava Saaba Rogangal Yaavum
Siluvaiyilae Sumanthu Neer Theertheer-2
Unthan Thazhumbugalaal Poorana Sugamanene
Sinthina Rathathinaal Meetpinai Petraene -Ninaithu

2. Ethanayo Throgam Naan Seithaen
Ithanai En mel Anbu Vaitheerae -2
Ethan Ennaiyumae Uthamanaakkineerae
Sinthina Rathathinaal Meetpinai petraene -Ninaithu

En Thagappan Nallavare – என் தகப்பன் நல்லவரே

En Thagappan Nallavare
என் தகப்பன் நல்லவரே
எல்லாவற்றிலும் வல்லவரே -2
இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
அவர் அற்புதம் செய்பவரே
இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
அவர் அதிசயம் ஆனவரே -2

1. உடைந்து போன வாழ்க்கையை
உறுவாக்கினார்
பிரிந்தூ போன வாழ்க்கையை புதிதாக்கினார் -2
காயம் கட்டுவார் என்னை ஆற்றுவார் தேற்றுவார் என்றும் நடத்துவார் – இயேசு நல்லவர்

2. விலுந்து போன என்னையும் அவர் உயர்தினார்
இளந்து போன எல்லாம் அவர் தந்திட்டார் -2
புது வாழ்க்கையும் சமாதானமும்
கிறுபையும் அவர் தறுகிரார் -2 – இயேசு நல்லவர்

En Thagappan Nallavare
Ellavatrilum Vallavare – 2
Yesu Nallavar Yesu Vallavar
Avar Arputham Seibavare
Yesu Nallavar Yesu Vallavar
Avar Adhisayamanavare

1. Udainthu Pona Vaazhkaiyai Uruvaakinar
Pirinthu Pona Vaazhkaiyai Puthithakinar
Kaayam Kaatuvar Ennai Aartruvar
Thetruvar Endrum Nadathuvar – 2 – Yesu Nallavar

2. Vilunthu Pona Ennayum Avar Uyarthinar
Ezhanthu Pona Ellam Avar Thanditaar
Puthu Vaazhkayum Samathaanamum
Kirubaiyum Avar Tharugirar – 2 – Yesu Nallavar