Vizhithelu Visuvasiyae Nee – விழித்தெழு விசுவாசியே நீ

Vizhithelu Visuvasiyae Nee
விழித்தெழு விசுவாசியே நீ
விழித்தெழுக் கண்களை ஏறிட்டுப்பார்
எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்றே
எழுந்து கட்டிட வா (2)

1. எருசலேமின் அலங்கத்தைப் பார்
தெருக்களின் அலங்கோலத்தைப் பார்
நெருங்கி ஜெபித்து நெருங்கி நீயும் வா
விரும்பி அலங்கத்தை கட்டிடவா (2) – விழித்தெழு

2. பாவத்தை வெறுக்கும் மனிதர் தேவை
ஆவியின் நிரப்புதல் பெற்றோர் தேவை
பாவியின் சாவை கூவி உரைக்கும்
ஆவிபெற்ற பரிசுத்தர் தேவை (2) – விழித்தெழு

3. அர்ப்பணம் தூயனே என்னை அளித்தேன்
அற்பனே ஆயினும் ஏற்றுக்கொள்ளும்
அறுவடைப் பணியைக் கருத்துடன் செய்ய
தருகிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும் (2) – விழித்தெழு

Neer Vendum Neere Vendum – நீர் வேண்டும் நீரே வேண்டும்

Neer Vendum Neere Vendum
நீர் வேண்டும் நீரே வேண்டும்
இயேசுவே எனக்கு நீரே வேண்டும்
பேசும் என்னோடு பேசும்
இயேசப்பா என்னோடு பேசும்

1. இதயம் திறந்து பேசிட நீர் வேண்டும்
இனிய வார்த்தை சொல்லிட நீர் வேண்டும் பேசும்….

2. எனது நிழலாய் என்றென்றும் வரவேண்டும்
உமது கரம் என்னை தேற்றிட வரவேண்டும்….

Neer Vendum Neere Vendum
Yesu Yenakku Neer Vendum
Pesum Yennodu Pesum
Yesappa Yennodu pesum

1. Idhayam Thirandu Pesida Neer Vendum
Inniya Vaarthai Sollida Neer Vendum Pesum….

2. Yenathu Nizhalai Yendrendrum Varavendum
Ummadu Karam Ennai Thetrida Varavendum Pesum….

Mun Sellum Megame – முன் செல்லும் மேகமே

Mun Sellum Megame

முன் செல்லும் மேகமே, ஆவியானவரே
மகிமையின் மேகமாய்
என்னை வந்து மூடுமே (2)

ஆவியானவரே (4)
உம் செட்டையினால் என்னை மூடும்
உம் சிறகுகளால் என்னை மறையுமே
ஆவியானவரே – (2)

1. வனாந்திர பாதையில் துணையாக வந்தீரே
பகலினிலும், இரவினிலும் பாதுகாப்பு தந்தீரே (2)
முட்செடியின் நடுவினிலே அக்கனியாய் வந்தவரே
வல்லமையின் வார்த்தையோடு தாசனோடு பேசினிரே (2)

ஆவியானவரே – (4)
உம் வார்த்தையினால் இன்று பேசுமே
திருவசனத்தால் பெலன் தாருமே
ஆவியானவரே (2)

2. ஆசரிப்பு கூடாரத்தில் இறங்கி வந்த மேகமே
வாசஸ்தலம் முழுவதும் மகிமையால் நிறப்பிடுதே (2)
சீனாயின் உச்சியிலே , மேகத்திரள் கூட்டமாய்
மறுரூபமாக்கிடும் வல்லமையின் ஆவியே (2)

ஆவியானவரே – (4)
எங்கள் சபையிலே நீர் வாருமே
எம்மை மறுரூபமாக்கடுமே
ஆவியானவரே – (2)

Parisutha Janamaai Ennaiyum – பரிசுத்த ஜனமாய் என்னையும்

Parisutha Janamaai Ennaiyum
பரிசுத்த ஜனமாய் என்னையும் தெரிந்தெடுத்தீர்
எல்லா ஜனம் பார்க்கிலும் சிறந்திருக்கப்பண்ணுவீர் (2)

பாடுவேன் நான் இயேசுவையே
துதிப்பேன் நான் தேவனையே (2)

என்னோடு பாடுங்கள் அல்லேலுயா
எல்லோரும் பாடுவோம் அல்லேலுயா அல்லேலுயா (2)

இயேசுவே என் புகழ்ச்சி
என் உள்ளத்தின் மகிழ்ச்சி
இகழப்பட்ட என்னையும்
சிறந்திருக்கப்பண்ணுவீர் (2)

கீர்த்தியும் புகழ்ச்சியும்
உண்டாகச்செய்வீர் நிச்சயம்
நீதிமானாய் என்னையும்
சிறந்திருக்கப்பண்ணுவீர் (2)

மகிபனின் புகழையே
அனுதினம் நான் பாடுவேன்
மகிமையாய் என்னையும்
ஜொலித்திருக்கப்பண்ணுவீர் (2)

Immaanuvel Immaanuvel Ennodu – இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடு

Immaanuvel Immaanuvel Ennodu

இம்மானுவேல் இம்மானுவேல்
என்னோடு இருப்பவரே
சர்வ வல்ல தேவன் என்னை எப்போதும் நடத்திடுவீர் – (2)

1.தேவரீர் என்னை ஆசிர்வதித்து
என் எல்லையை பெரிதாக்கும்
உமது கரம் என்னோடிருந்து
தீங்குக்கு விலகிவிடும்

இம்மானுவேல் இம்மானுவேல்
என்னோடு இருப்பவரே
சர்வ வல்ல தேவன் என்னை
தீங்குக்கு விலகிவிட்டீர்

2.வெட்கத்திற்கு பதிலாக
பிழைக்கவே பிழைக்க செய்யும்
உம் வார்த்தையாலே பிழைக்கச்செய்து உயரவே
எழும்பச்செய்யும்

இம்மானுவேல் இம்மானுவேல்
என்னோடு இருப்பவரே
சர்வ வல்ல தேவன் என்னை
உயரவே எழும்பச்செய்தீர்

3.என் சமூகம் உன்னக்கு முன்பாய்
செல்லும் என்றீரே
சர்வ வல்ல தேவன் என்னை
உம் கிருபையால் காத்துக்கொள்ளும்

இம்மானுவேல் இம்மானுவேல்
என்னோடு இருப்பவரே
சர்வ வல்ல தேவன் என்னை
உம் கிருபையால் காத்துக்கொண்டீர்

Theengai Kaanaathirupaai – தீங்கை காணாதிருப்பாய்

Theengai Kaanaathirupaai
தீங்கை காணாதிருப்பாய் – 4
என் மகனே என் மகளே – இனி – 2
தீங்கை காணாதிருப்பாய் – 4

அல்லேலுயா அல்லேலுயா என்றே பாடிடு
இயேசு என்ற நாமத்தை துதித்துப் பாடிடு – உன்
தீமைகள் நன்மையாய் மாறிடும் – 2 – தீங்கை

1. தீமைகள் தேசத்தில் பெருகிடும்
வறுமைகள் வியாதிகள் தாக்கிடும்
வல்லவர் இயேசுவின் கரங்களே
தீமையை விலக்கியே காத்திடுமே – உன் – தீங்கை

2. பொல்லாத மனிதர்கள் எழும்பிடுவார்
உனக்கு தீமைகள் செய்ய பதிவிருப்பார்
உலகத்தை ஜெயித்த நம் இயேசு
பொல்லாத மனிதரைக் கலங்கடிப்பார் – தீங்கை

3. எதிராக சாத்தான் எழும்பிடுவான்
உனக்கு தீங்குசெய்ய எத்தனிப்பான்
சாத்தானின் தலையை மிதித்தவர்
சத்துரு சேனையை சிதறடிப்பார் – தீங்கை

Puthiya Naalukkul Ennai Nadathum – புதிய நாளுக்குள் என்னை நடத்தும்

Puthiya Naalukkul Ennai Nadathum

புதிய நாளுக்குள்(ஆண்டுக்குள்) என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா

ஆரம்பம் அற்பமானாலும்
முடிவு சம்பூர்ணமாம்
குறைவுகள் நிறைவாகட்டும் – எல்லாம்
வறட்சி செழிப்பாகட்டும் – என்

வெட்கத்திற்கு பதிலாக
(இரட்டிப்பு) நன்மை தாரும் தேவா
கண்ணீருக்குப் பதிலாக – எந்தன்
களிப்பைத் தாரும் தேவா – ஆனந்த

சவால்கள் சந்தித்திட
(இன்று) உலகத்தில் ஜெயமெடுக்க
உறவுகள் சீர்பொருந்த – குடும்ப
சமாதானம் நான் பெற்றிட – மனதில்

Puthiya Naalukkul(Andukul) Ennai Nadathum
Puthiya Kirubaiyaal Ennai Nirapum
Puthu Kirubai Thaarum Devaa
Puthu Belanai Thaarum Devaa

Aarampam Arpamaanaalum
Mudivu Sampoornamaam
Kuraivukal Niraivaakattum – Ellaam
Varatchi Selippaakattum – En

Vetkathirku Pathilaaka
(Iratchippu) Nanmai Thaarum Devaa
Kanneeruku Pathilaaka – Enthan
Kalipai Thaarum Devaa – Aanantha

Savaalkal Santhithida
(Indru) Ulakathil Jeyamedukka
Uravukal Seerporuntha – Kudumpa
Samaathaanam Naan Pettida – Manathil

Neer Oruvare Neer Oruvare – நீர் ஒருவரே நீர் ஒருவரே

Neer Oruvare Neer Oruvare
நீர் ஒருவரே (3) துதிக்குப் பாத்திரர்
நீர் ஒருவரே (3) கனத்துக்குப் பாத்திரர்

உம்மை ஆராதிப்பேன் (4)
நீரே துதிக்குப் பாத்திரர்
நீரே கனத்துக்குப் பாத்திரர்
நீரே மகிமைக்குப் பாத்திரர்
இயேசுவே(2)

1. துதிகளின் மத்தியிலே வாசம் செய்பவரே
தூதர்களால் போற்றப்படும் தூய தேவனே
அகிலத்தையும் படைத்த தேவன் ஒருவரே
துதி கன மகிமை எல்லாம் உமக்குத்தானே
(உம்மை ஆராதிப்பேன் …)
2. ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே
என்றென்றும் ஜீவிக்கின்ற ஜீவ தேவனே
ராஜாதி ராஜாவாய் நீர் வரப்போகிறீர்
மகிமையின் சாயலாய் எம்மை மாற்றப்போகிறீர்
(உம்மை ஆராதிப்பேன் …)
3. பரலோகம் செல்லும் வழியை அறிந்தவர் நீர்தானே
பரிசுத்தமாய் வாழ எம்மை அழைத்தவரே
பாவியை பரிசுத்தனாய் மாற்றும் தெய்வமே
ஆதியும், அந்தமுமாய் இருப்பவரே
(உம்மை ஆராதிப்பேன் …)

Ennai Kaakum Karthar – எனைக்காக்கும் கர்த்தர்

Ennai Kaakum Karthar

எனைக்காக்கும் கர்த்தர் நீர் தானே ஐயா
எனைத்தாங்கும் கர்த்தர் நீர் தானே ஐயா
எல்லாமே நீர்தானய்யா (2) என்

1. வனாந்திர பாதைகளில் தனித்து அலைந்தபோது
பாதை காட்டும் தூதனாக முன் நடந்து சென்றீர்
தேவைகள் எல்லாம் பெருகின போதும்
என் தேவைகள் எல்லாம் சந்தித்தீரே
நீர் இல்லாமல் ஒன்றும் முடியாது ஐயா
நீர் இல்லாமல் ஒன்றும் தெரியாது ஐயா
(எல்லாமே நீர்தானய்யா (2) என்)

2. பாரங்கள் தாங்காது தவித்து நின்றபோது
என் பாரங்கள் எல்லாம் நீர் சுமந்து கொண்டீர்
நம்பினோர் எல்லாம் கைவிட்டபோதும்
என் நம்பிக்கை நீரே என்றறியச்செய்தீர்
நீர் இல்லாமல் ஒன்றும் முடியாது ஐயா
நீர் இல்லாமல் ஒன்றும் தெரியாது ஐயா
(எல்லாமே நீர்தானய்யா (2) என்)

Sarva Valla Devan Piranthar – சர்வ வல்ல தேவன் பிறந்தார்

Sarva Valla Devan Piranthar
சர்வ வல்ல தேவன் பிறந்தார்
மனுகுலம் மீட்க மன்னன் பிறந்தார்
இயேசு பிறந்தார் ராஜன் பிறந்தார்
மானிடரை மீட்க மீட்பர் பிறந்தார்

HA HA HA HALLELUJAH
HO HO HO HOSANNA – 2

வறுமையை விரட்டிட வள்ளல் பிறந்தார்
வெற்றியைத் தந்திடும் வேந்தன் பிறந்தார்
சாபங்கள் நீக்கும் சுத்தர் பிறந்தார்
சமாதானம் அருளூம் அண்ணல் பிறந்தார்

HA HA HA HALLELUJAH
HO HO HO HOSANNA – 2

அபிஷேகம் அளித்திட அன்பர் பிறந்தார்
வரங்களை வழங்கிடும் வின்னர் பிறந்தார்
நித்திய ஜீவன் தரும் நாதன் பிறந்தார்
தம்முடன் கொண்டு செல்ல மீண்டும் வருவார்

HA HA HA HALLELUJAH
HO HO HO HOSANNA – 2